Chilli chips குறுந்திரைப்படபோட்டி - 2024

மேலதிக தகவல்களுக்கு

எமது ஊடக வாட்ஸாப்ப் குழுவுடன் இணைத்து மேலதிக விபரங்களை உடனுக்குடன் பெற்று கொள்ளுங்கள்

👉🏻 இலங்கையில் எந்த பகுதியில் இருந்தும் போட்டியில் பங்கு கொள்ளலாம்.
👉🏻 பங்கேற்பாளர் குறைந்தபட்சம் 18 வயதுடையவராக இருக்க வேண்டும்.
👉🏻 ஒருவர் ஒரு குறும்படத்தை மட்டுமே அனுப்ப முடியும்.
👉🏻 தலைப்பு, கருப்பொருள் என்ற வரையறை இல்லை. நீங்கள் விரும்பிய தலைப்பில்,
கருப்பொருளில் உங்கள் குறும்படங்களை உருவாக்கலாம்.
👉🏻 எழுத்து, தலைப்பு உள்ளடங்கலாக 10 நிமிடங்களுக்கு குறைவாகவும் 20 நிமிடங்களுக்கு
அதிகமாகவும் இருக்கக்கூடாது.
👉🏻 குறும்படத்தில் பயன்படுத்தப்படும் இசை, பாடல்கள் அனைத்தும் படைப்பாளியால்
சொந்தமாக உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
👉🏻 குறும்படம் குறைந்தது HD 1080p தரத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
👉🏻 குறும்படம் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் அல்லது வசனங்கள் இல்லாமல்
இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் உபதலைப்புகள் இடப்பட வேண்டும்.
👉🏻 அனுப்பப்படும் குறும்படங்கள் அனைத்தும் எங்கள் ஊடகத்திலும், எங்கள் நிறுவனத்தின்
சமூக ஊடக பக்கங்களிலும் பதிவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.
👉🏻 இந்தப் போட்டிக்கு முன், குறும்படம் எந்த ஊடக திரையரங்கம், மண்டப வெளியீடுகள்
மற்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கவோ, வெளியிடப்பட்டிருக்கவோ
அல்லது காட்சிப்படுத்தப்பட்டிருக்கவோ கூடாது.
👉🏻 குறும்படத்தை அனுப்பி வைக்க வேண்டிய இறுதி திகதி 31/08/2024
👉🏻 உங்கள் குறும்படம் 2024 மார்ச் மாதத்துக்கு பிறகே உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும் .
வேறு போட்டிகளுக்கு அனுப்பட்டிருத்தல் கூடாது
👉🏻 அனுப்பவேண்டிய முறையை பின்பற்றும் குறுந்திரைப்படங்கள் மாத்திரமே போட்டிக்காக
பரிந்துரைக்கப்படும். தவறும் பட்சத்தில் போட்டி விதிமுறையை மீறியதாக கருத்திற்கொண்டு
போட்டிக்காக பரிந்துரைக்கப்படாமல் நிராகரிக்கப்படும்.