பல்முக கலைஞன் - இயக்குனர் கிஷாந்
CHAT WITH CC


ஒன்றில்லையேல் இன்னொன்று கலையில் இல்லை என்னும் சொல்லுக்கு இடமே இல்லை. ஓர் உண்மையான கலைஞனுக்கு ஒவ்வொரு திறமைக்கும் ஒவ்வொரு இடமுண்டு. கலைத்துறையில் எவ்வழியிலும் கால்த்தடம் பதிக்க முடியும் என்று பல கலைஞர்கள் ஒவ்வொரு வழியாக பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் அவ்வாறு பயணித்துக் கொண்டிருக்கும் நம்மவர் கலைஞர்களில் ஒருவரான #கிஷாந் அவர்களே இன்றைய சில்லி சிப்சின் தொடர்பாடல் நட்சத்திரமாக ஜொலிக்க இருக்கிறார் .
வணக்கம். உங்களைப் பற்றிய அறிமுகத்தை எங்களுக்கு கூறுங்கள்.
எனது பெயர் கீர்த்திசீலன் கிஷாந். நான் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் உயர்தரம் வரை கல்வி பயின்றேன். பின்னர் மஞ்சந்தொடுவாய் தொழினுட்ப கல்லூரியில் "Automobile" பிரிவில் தொழில் பயிற்சி பெற்றேன். பின்னர் அதே பிரிவில் Engineering வாய்ப்பு கிடைத்தன. ஆனால் நாட்டில் நிலவிய அசாதாரண சூழலால் பொருளாதார பிரச்சனையால் தொடர முடியாமல் போனது.
கேள்வி 1 :- உங்களுடைய கலைப்பயணம் எப்பொழுது ஆரம்பித்தது?
பதில் :- 2013 ஆரம்பித்தது. எனது நண்பனின் (அபராஜிதன்) துணையுடன் எனது முதலாவது படைப்பானது YouTubeல் வெளியானது. பின்னர் சிறிது சிறிதாக பல குறும்படங்கள் உருவானது. பின்னர் சகோதரன் S.N.Vishnujan இணைந்து படைப்புகள் பெரிதானது. அதன் ஆரம்பமே சிவா அண்ணா பாகம் இரண்டு மட்டுநகரில் தேவநாயகம் மண்டபத்தில் வெளியானது. 2016க்கு பின்னர் இன்றுவரை 8 குறுந்திரைப்படங்கள் இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன்.




கேள்வி 2 :- சிறப்பு உங்களுடைய குறும்படங்களில் உங்களுக்கு அதிக வரவேற்பை பெற்று தந்த குறும்படம் எது? அதைப்பற்றிய விபரங்களை எங்களுக்கு கூறுங்கள் ?
பதில் :- எல்லா குறும்படங்களும் ஏதோ ஒரு வகையில் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. இருந்தாலும்கூட குறிப்பாக முதலாவது "சிவா அண்ணா" திரைப்படத்தை கூறலாம். அரங்கு நிறைந்த காட்சி.. பின்னர் "மீண்டும் ஒரு நிமிடம்". 2019 மீண்டும் ஒரு அரங்கு நிறைந்த காட்சியளித்தது.
அண்மையிலே கூட அந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான குவியம் விருதை பெற்றது... பின்னர் அவுஸ்திரேலிய அரசு நடத்திய "zero chance 2021" போட்டியில் "Zero" என்கிற குறும்படம் அகில இலங்கை ரீதியாக 3வது இடம்பெற்றது. அண்மையில் "Core" தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் நடத்திய போட்டியில் அகில இலங்கை ரீதியாக 2வது இடம் பெற்றுள்ளது. இயக்குநராக பல அங்கிகாரமும் வரவேற்பையும் பெற்றது. மேலும் பெறும் என்கிற நம்பிக்கையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது...
கேள்வி 3 :- சினிமா துறையில் இயக்குனர் எனும் அடையாளத்தை தவிர்த்து வேறு அடையாளங்களை கொண்டுள்ளீர்களா?
பதில் :- இயக்குனராக மட்டுமே பணியாற்றிட வேண்டுமென நினைத்திருந்த எனக்கு. பொருளாதாரம் அவ்வளவாக கை கொடுக்கவில்லை. எனவே பணம் கொடுத்து இசை மற்றும் படத்தொகுப்பு செய்ய முடியாததாக போனது. ஆகவே, அணைத்தையும் பழக ஆரம்பித்து இப்போது இயக்குனராக பணியாற்றியதை விட இசையமைப்பாளராகவும் படத்தொகுப்பளராகவும் பணியாற்றி வருகின்றேன். இப்போது இதுவே எனது வருமானத்தை ஈட்டிதரும் தொழிலாகவும் மாறிவிட்டது.
கேள்வி 4 :-நீங்கள் இயக்குனராக ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை எதிர்கொள்ளும் சவால்களை பற்றி பகிருங்கள்?
பதில் :- இயக்குனராக ஆரம்பித்த காலத்தில் இருந்து வீட்டைப் பொறுத்தவரையில் எல்லோருடைய கலைப் பயணத்தை போற்றும் ஆரம்ப காலத்தில் சற்று எதிர்த்தாலும் பின்னர் அவர்களே முழுமையான ஆதரவினை வழங்கினார்கள். எங்களுடைய எந்த குறும்படமோ முழு நீள திரைப்படமோ எங்கு திரையிட்டாலும் அங்கு அரங்கு நிறைந்த காட்சிகளையே காண முடிகிறது. ஆகையினால், மக்களில் 80 விதமான மக்கள் எங்களுக்கு ஆதரவினையை வழங்குகிறார்கள். இவை இரண்டுமே எந்த கலைஞனிடம் கேட்டாலும் சவால் என்று கூறக்கூடிய விடயங்கள் எனது வாழ்வில் சுலபமாக போய்விட்டது. ஆனாலும், இக்கலைத் துறையின் மூலம் வரும் லாபம் எனது பொருளாதார சூழ்நிலையை சவாலாக மாற்ற ஆரம்பித்து விட்டது. அதனையும் விரைவில் சரி செய்து விட்டால் சவால் என்கின்ற விடயத்தை தாண்டி இலங்கையிலும் சினிமா துறையில் பயணிக்கலாம் என்கின்ற நம்பிக்கையை கொண்டு வந்து விடும் மக்கள் மத்தியில். இதற்கான முயற்சியில்தான் நான் முழு நேரமாக இறங்கி இருக்கிறேன். இச்சவாலையும் வென்று காட்ட வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது...


கேள்வி 5 :- இயக்குனராக கடமையாற்றியமைக்கும் இசையமைப்பாளராக கடமையாற்றுவதற்கும் வேறுபாடுகள் உணர்கிறீர்களா?
பதில் :- இரண்டிற்கும் அவ்வளவு பெரிதாக எனக்கு வேறுபாடு தெரியவில்லை. அதற்குக் கிடைத்தது போலவே இதற்கும் எனக்கு வரவேற்பு கிடைத்தது விருதுகளும் கிடைத்தது. எனது இசை பயணத்தில் மூன்றாவது இசையமைத்த குறும் திரைப்படத்திற்கு அரச விருது "பவுர 2018" சிறந்த இசையமைப்பாளருக்காக கிடைத்தது. பின்னர் அதனைத் தொடர்ந்து இசையமைத்த திரைப்படம் மிக பிரம்மாண்டமாக திரையிடப்பட்டிருந்தது...
(மறைபுதிர் 2019) அப்படி படிப்படியாக இன்றுவரை 30 குறுந் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறேன். அதில் குறிப்பாக நான்கு திரைப்படங்கள் திரையரங்கத்தில் வெளியானது... மேலும் எனது இசை துறைக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே நினைக்கிறேன்... ஆகையினால் இரண்டிற்கும் வேறுபாடு கிடையாது. இரண்டையும் என் இரண்டு கண்கள் போல நேசிக்கிறேன்...
கேள்வி 6 :- இசையை நேசிக்காமல் இசையை அமைக்க முடியாது. அந்த வகையில் உங்களுக்கு இசைத்துறையில் பாடகராகும் ஆசை உள்ளதா ?
பதில் :- அண்மையில் வெளியான "ஒரு கழுதையின் ஆட்டம்" என்கின்ற குறுந்த திரைப்படத்தில் இரண்டு பாடல்களை பாடி இருக்கிறேன்.. அதைத் தவிர்த்து இன்னும் இரண்டு பாடல்கள் பாடி முடித்திருக்கிறேன். அவை இரண்டும் விரைவில் வெளியாகும். எதையும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் போது தான் அதற்கான சரியான வழி பிறக்கும் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.
கேள்வி 7 :- மகிழ்ச்சி அண்ணா சினிமா துறையில் இயக்குனராக இசையமைப்பாளராக படத்தொகுப்பாளராக பாடகராக வலம் வருகிறீர்கள் என்று இதுவரை கலந்துரையாடியதில் அறிந்து கொண்டோம் மேலும் நாங்கள் அறியாத உங்களின் திறமைகள் பற்றி பகிருங்கள்?
பதில் :- சிறப்பு சப்தங்களை பதிவு செய்யும் கலைஞனாகவும், பின்னணி குரல் கொடுப்பவனாகவும், சில திரைப்படங்களில் நடிகனாகவும், ஒளிப்பதிவு கலைஞனாகவும் பணியாற்றி இருக்கிறேன். மற்றும் கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறேன்...


கேள்வி 8 :- இத்தனை பணிகளிலும் உங்களுக்கு மிகவும் கடினமான பணி எதுவென்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?
பதில் :- இவைகளில் எந்த பணியையும் நான் கடினமாக எண்ணியதில்லை. இருந்த போதும் நீங்கள் கேட்பதால் ஒன்றை மட்டும் மிகைப்படுத்தி கூற விரும்புகிறேன். சிறப்பு சப்தத்தை பதிவு செய்யும் வேலை சற்று கடினமாக இருக்கும். காரணம் அவை திரைப்படத்திற்கு ஏற்றார் போல்
அமைய வேண்டும் என்பதற்காக அதிக அளவில் நேரம் எடுப்பதோடு காதுகளையும் பதம் பார்த்து விடும். நாம் இரைச்சல் என்று கூறக்கூடிய அனைத்து சப்தங்களையும் கோர்ப்பதே இதன் வேலையாகும்.
கேள்வி 9 :- சினிமா துறை மூலமாக வளர்ந்துவரும் வரும் கலைஞர்களில் ஒருவரான உங்களின் எதிர்கால இலட்சியம் எதுவாக இருக்கிறது?
பதில் :- சினிமா துறையை பொருத்த மட்டில் இலங்கையில் தமிழ் சினிமாவுக்கான ஒரு தனி இடத்தினை பெற வேண்டும் என்பதே எனது லட்சியமாக நான் மனதில் கொண்டது. அது மட்டுமின்றி இத்துறையின் மூலம் ஒரு கலைஞனின் பொருளாதார சூழ்நிலை மேம்பட வேண்டும். அவனால் இத்துறையின் மூலம் தனது வருமானத்தினை நிர்ணயம் செய்ய முடியும் என்கின்ற நம்பிக்கையை கொண்டு வர வேண்டும். அது மட்டும் இன்றி மற்றைய நாடுகளில் திரைப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பையும் வருமானத்தையும் நமது திரைப்படங்களும் பெற வேண்டும் என்பதே எனது எதிர்கால லட்சியமாக வைத்திருக்கிறேன்.
கேள்வி 10 :- உங்கள் கலைப்பயணத்தில் உங்களுக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நீங்கள் கூற விரும்புவது என்ன?
பதில் :- இக்கலை பயணத்தில் என்னால் இவ்வளவு தூரம் பயணிக்க முடிகிறது என்றால் எனது நண்பர்களும் குடும்பமும் தான் காரணம். ஆகையினால் இவர்களுக்கு நான் கூற விரும்புவது நன்றி என்ற அந்த வார்த்தை மிகையாகாது. இருந்த போதும் அவர்களை சுட்டிக்காட்டி நன்றி கூறுவது தான் அவர்களுக்கு நான் கொடுக்கும் மரியாதை. இத்துறையில் எனது ஆர்வத்தை புரிந்து கொண்டு என்னை அழைத்து வந்த நண்பன் அபராஜிதன் எனது இசை ஆர்வத்தை புரிந்து எனக்காக பல சாப்ட்வேர்களை(Software) தந்து இசை துறையில் பங்கு பெறச் செய்த நண்பன் அஜி. பின்னர் பல திரைப்படங்களை செய்வதற்கு எனக்கு உறுதுணையாக இருந்த சகோதரன் விஷ்ணுஜன் மற்றும் தம்பி அபிஷேக். இப்போது என்னுடன் பயணித்துக் கொண்டிருக்கும் எனது குழு உறுப்பினர்கள் துசி அண்ணன் பிரதிஜன் யதிஜன். என்னாலும் இத்துறையில் உழைத்து நிலைமையை மாற்ற முடியும் என்று என்னை நம்பி பல லட்சங்களை தந்து என்னை மேலும் வளர்க்க நினைக்கும் எனது குடும்பத்திற்கும் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன். அது மட்டுமன்றி இன்று வரை எங்கள் திரைப்படத்திற்கும் எங்களுக்கும் ஆதரவு கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஊடகங்களுக்கும் குறிப்பாக சில்லி சிப்ஸ் ஊடகத்திற்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். பலர் என்னுடன் பணியாற்றி இருந்தாலும் நான் மனதில் வைத்திருக்கும் இவர்களே எந்த வித லாபமும் இன்றி ஆரம்பத்திலிருந்து இன்றுவரை என்னுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்...


உங்களுக்கான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி உங்களுடைய படைப்புகளை பற்றியும் உங்களுடைய செயல்பாடுகள் பற்றியும் எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு சில்லி சிப்ஸ் (#Chillichips) ஊடாக எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை கூறிக் கொள்வதோடு உங்களுடைய படைப்புகள் இன்னும் பிரம்மாண்டமாக வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
கிஷாந்:- மிக்க நன்றி. நீங்கள் நன்றி கூறுவதை விட நாங்கள் தான் உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். எங்களுடைய திறமைகளை அனைத்து இடங்களிலும் காட்சிப்படுத்த வேண்டும் என்று எண்ணிய சில்லி சிப்ஸ் ஊடகத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கிஷாந் அவர்கள் இயக்குனராக, நடிகராக, இசையமைப்பாளராக, தொகுப்பாளராக, ஒளிப்பதிவாளராக, பாடகராக பணியாற்றிய படைப்புகள்.👇🏻
வெஞ்சம் - 2013
போறவழியில - 2013
வறுமை கொடிது -2013
நீதாண்டா
ஹீரோ -2014
யார் திருடன் -2014
தீதின்றி வந்தபொருள் -2014
சர்பங்கள் தீண்டும் பிழைத்து வாழு -2014
சிவா அண்ணா1 - 2014
சிவா அண்ணா2 -2016
தேனிலவு - 2018
ஊமையே மேல் - 2018
மீண்டும் ஒரு நிமிடம் - 2019
கழுதை - 2019
வேட்டையன் - 2019
மறை புதிர் - 2019
Name is pullingo EP 02 - 2019
யார் கெட்டவன் - 2019
யாரால் யாருக்கு - 2020
சரித்திரம் - 2020
கருணைக் கொலை - 2020
ஒற்றை சிறகு - 2020
அப்பாவி - 2021
லஞ்சம் தவிர் - 2021
வெசம் - 2021
கருத்த பூ (பாடல்) - 2021
பாசம் -2021
HORMONES - 2021
அற்கா-2021
இறக்காதவன்-2022
போராட்டம்-2021
ஆபத்தாண்டவன்-2021
தீட்டா ஓவியம்-2021
ஆரம்பம் ஆரம்பமாகட்டும்-2022
உனக்கென்ன எனக்கென்ன-2023
சொல்லாத சோகம் பாடல் -2023
ஒரு கழுதையின் ஆட்டம்-2023
just rumor-2023
போராட்டம்-2023
Failure திருடன் web series -2023
இது நம் தேசம் - 2021
வேட்டை தொடரும் - 2021
Zero - 2021
ஒளிதம் - 2021
வேகம் - 2020