நடிகை, இயக்குனர் தனுஷ்கா ரமேஷ்

CHAT WITH CC

6/23/2023

நம்மவர் சினிமா துறையில் பெண்களுக்கான வரவேற்பு சற்று குறைவாகத்தான் காணப்படுகிறது. "நடிகை" எனும் வார்த்தைக்குள் இருக்கும் பெண்ணையும் அவளின் கவர்ச்சியையும் பார்க்கும் உலகம் நடிகையானவளின் திறமைகளையும், அர்ப்பணிப்புகளையும், எதிர்பார்ப்புகளையும் பார்ப்பதில்லை பல துறைகளில் பணியாற்றும் பெண்களின் மத்தியில் சினிமா துறையை விரும்பி பல சவால்களின் மத்தியில் "என்னால் முடியும்" என்ற வாக்கியத்தை உச்சரித்தபடியே கலைச் சாதனைகள் புரியும் ஒவ்வொரு பெண்களும் மதிக்கத்தக்கவர்களே. அந்த வரிசையில் சில கனவுகளோடும் பல எதிர்பார்ப்புகளோடும் சினிமாவில் தடம் பதித்த நடிகை தனுஷ்கா ரமேஷ் அவர்களே

சில்லிசிப்ஸ்சின் இன்றைய தொடர் பாடல் நட்சத்திரமாக ஜொலிக்க இருக்கிறார். வணக்கம். உங்களைப் பற்றிய அறிமுகத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

எனது பெயர் தனுஷ்கா ரமேஷ். ஆனால் என்னை எல்லோரும் (வாலு) என்று செல்லமாக அழைப்பார்கள். இடம் களுவாஞ்சிகுடி. 24 வயது. பாடசாலை மட் /பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை. சினிமாவில் ஒரு நடிகையாகவும் & இயக்குனராகவும் உள்ளேன்.

கேள்வி 1 :- சினிமா துறையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட காரணம் என்ன ?

பதில் :- எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு புகைப்படம் கலைஞர் ஆக வேண்டும் என்பதே எனது இலட்சியம். ஆனால் எமது இயக்குனர் RJ NeLu அண்ணா மூலம் இத் துறைக்குள் வந்தேன். முதலில் பயம் இருந்தது. காரணம் பெண்கள் இத்துறையில் வந்தால் சமூகத்தின் கருத்து தவறாக பேசப்படும் பேசப்பட்டு கொண்டுதான் வருகின்றது.

கேள்வி 2 :- இப்பொழுது சினிமா துறையில் தங்களின் நிலை எவ்வாறு காணப்படுகிறது?

பதில் :- இப்போது எனது நிலை ஒரு பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் உள்ளது. இதற்கு காரணம் எனது முதலாவது குறுந்திரைப்படம் "online". இது எனக்கு பெருமித கௌரவத்தை ஈட்டியது. இப்போது மட்டும் இல்லை. எப்போதும் இத்துறையில் நான் என்னால் முடிந்த அளவுக்கு என்னை அர்ப்பணிப்பேன்.

கேள்வி 3 :- சினிமா துறையில் நடிகையாகவும் மற்றும் இயக்குனராகவும் பணியாற்றி வருகிறீர்கள் என்று கூறினீர்கள். இதுவரை எத்தனை படங்கள் நடித்துள்ளீர்கள் ?எத்தனை படங்கள் இயக்கி உள்ளீர்கள்?

பதில் :- 3 குறுந்திரைப்படம் 4 album song 2 cover song 1 பாடலில் இயக்குனராகவும் 1 குறுந்திரைப்படத்தில் துணை இயக்குநராக பணியாற்றிய இருக்கிறேன்.

கேள்வி 4 :- மகிழ்ச்சி மேலும் சினிமாத்துறையில் வேறு பணி புரிய விரும்புகிறீர்களா?

பதில் :- ஆம் எனக்கு சினிமா துறையில் DOP ஆக பணி புரிய ஆசை அது ஒரு நாள் நிறைவேற்றுவேன்.

கேள்வி 5 :- இத்துறையில் நுழைந்தவுடன் ஒரு பெண் என்ற முறையில் எதிர்கொண்ட சவால்களை பற்றி கூறுங்கள்?

பதில் :- பல சவால்கள் பெண் என்றாலே ஒரு சவால்தானே. முதலாவது என் குடும்பதினரால் இன்று வரை இத்துறைக்கு எந்தவொரு ஆதரவும் இல்லை. நண்பர்கள் என்னிடம் பழகும் விதம் குறைந்தது. சமூகம் மற்றும் உறவினர்களின் தவறான வதந்திகள். ஆனால் இது அனைத்தும் என்னை இன்னும் இத் துறையில் சாதிக்கவேண்டும் என்ற ஒரு நம்பிக்கை உருவாக்கியது.

கேள்வி 6 :- நிச்சயமாக பெண்களின் சாதனை பலருக்கு வேதனைதான். உங்களுக்கு சினிமா தவிர்த்து வேறு லட்சியம் உள்ளதா?

பதில் :- ஆம் ஒரு wildlife photographer ஆவது என் சின்ன வயது இலட்சியம். காரணம் எனக்கு சிறு வயதில் இருந்தே புகைப்படம் என்றால் பிடிக்கும். அதோடு என் சாதனை சரித்திரமாக வேண்டும் என்ற பேராசை. முயற்சி செய்வேன் என் ஆசைகள் அனைத்தையும் ஒரு சரித்திரமா நிறைவேற்றுவேன்.

கேள்வி 7 :- சினிமாவில் தடம் பதித்த பின் வெளியிடங்களில் உங்களுக்கான வரவேற்பு எவ்வாறு காணப்படுகின்றது?

பதில் :- பலருக்கு என்னை தெரியும். எல்லோரும் என்னோடு வந்து கதைப்பார்கள். ஒரு மரியாதை கிடைக்கும்.

கேள்வி 8 :- இவ் இளம் வயதிலே இத்தனை கனவுகளை சுமக்கும் உங்களை ஊக்குவிக்கும் வகையில் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் நபர்களை பற்றி கூறுங்கள். அவர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில் :- 1st my partner & அவரது குடும்பத்தினர். 2nd இத் துறையில் உள்ள உறவுகள். 3 rd எனது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி க.பிரதீஸ்வரன் மற்றும் அங்கு உள்ள சேவையாளர்கள். 4rd எனது சில நண்பர்கள் முக்கியமா (prasha) எல்லாருக்கும் ரொம்ப நன்றி. முக்கியமா தான் கல்யாணம் பண்ண போற பொண்ணு இத்துறையில் இருந்தா சில பசங்க விரும்ப மாட்டார்கள். ஆனா என்னோட partner என் ஆசை கனவை அவரோடதா நினைச்சு எனக்கு முழு ஆதரவு

அவரும் அவரது குடும்பமும் தருகிறார்கள். அதற்கு நன்றி என்ற வார்த்தை மட்டும் போதாது.

கேள்வி 9 :- உங்களை இத்துறை சம்பந்தமாக காயப்படுத்தியவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

பதில் :- நன்றி. குறை சொல்பவர் இல்லை என்றால் இங்கு சாதனைகள் என்ற ஒன்று இல்லை.

கேள்வி 10 :- இறுதியாக உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

பதில் :- இது உங்கள் வாழ்க்கை. அதை நீங்கள் தான் வாழ வேண்டும். உங்களை உருவாக்க இங்கு யாரும் வரமாட்டார்கள் . பிடிச்ச போல வாழுங்கள்.

சிறிய பதில்களாக இருந்தாலும் தரமான பதில்களை தந்துள்ளீர்கள். உங்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதுடன் உங்கள் கனவுகளும் லட்சியமும் ஒரு நாள் நினைவாக வேண்டுமென சில்லி சிப்ஸ்(Chillichips) ஊடாக வாழ்த்துகிறோம். நன்றி.

மிக்க நன்றி.என்னை போன்ற கலைஞர்களின் திறமையை

வெளிகொண்டுவர காரணமாக உள்ள உங்களுக்கும் Chillichips நடத்துனருக்கும்நன்றிகள்.

தனுஷ்கா அவர்களின் படைப்புக்கள்:

  • 2021 :- "காதலின் மாயை " குறுந்திரைப்படம்.

  • 2022 :- "லவ்வு" பாடல்

  • 2022 :- "online" குறுந்திரைப்படம்

  • 2022 :- "வெல்வெட் பெண்ணே" பாடல்

  • 2022 :- "வெல்வெட் பள்ளிக்கூடம் " குறுந்திரைப்பட துணை இயக்குநர்.

  • 2022 :- "வினை" குறுந்திரைப்படம்.

  • 2022:- "சொல்லடி கனவே" பாடல்

  • 2023 :- "சகியே " பாடலில் இயக்குனராகவும் நடிகையாகவும்.

  • 2023 :- "முதலும் நீ முடிவும் நீ " cover song.

  • 2023 :- "lellana" cover song