Batti Super Star - நடிகர் ஜனா RJ
CHAT WITH CC
வணக்கம். எனது முழுப்பெயர் ரவீந்திரன் சுபஜனனன். நான் பிறந்து வளர்ந்தது மட்டக்களப்பில். நான் சாதாரணதரம் வரை மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் உயர்தரம் மட்/புனித மிக்கேல் கல்லூரியிலும் பயின்றேன். தற்போது உங்கள் முன்னிலையில் சாதாரண கலைஞனாக உள்ளேன்.
கேள்வி 1 :- ஜனா RJ அண்ணா அவர்களே உங்களின் சினிமா பயணம் எங்கு ஆரம்பமானது?
பதில் :- மற்றவர்களை போன்று சிறு வயது ஆர்வம் எல்லாம் எனக்கில்லை. ஆனால் சிறுவயதிலிருந்தே திரைப்படங்களை பார்வையிடுவதில் மிகுந்த ஆர்வம். அதன் காரணமாகவோ என்னமோ உயர்தரம் முடிந்து நண்பனின் குறும்படத்தில் எனக்கும் ஏதும் வாய்ப்பிருக்கா என விளையாட்டாய் கேட்டு அந்த குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று இத்துறையில் காலடி பதித்தேன்.
கேள்வி 2 :- ஒரு கலைஞனாக நீங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் எவை?
பதில் :- தற்போதைய சமூகத்தை பொருத்தவரை இந்திய சினிமாவின் மோகம் தாக்கம் அதிகம் இருப்பதால் நம்முடைய நடிப்பையும், படைப்பையும் அவர்களுடைய படைப்புடனே ஒப்பிட்டு பார்க்கின்றனர். ஆகவே அவர்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் எங்களுடைய முழு முயற்சியையே நாங்களும் தருகின்றோம். ஆனாலும் மக்களின் நம்பிக்கையை பெறுவது சற்று கடினமாக இருக்கின்றது. மற்றையது வர்த்தக ரீதியாக சினிமா தற்போதுதான் முன்னேறி வருகின்றது. இருந்தும் பெற்றோர்கள் மத்தியில் நேரத்தை வீணடிக்கும் செயலாக நினைப்பது போன்றவற்றால் உளரீதீயான தாங்கங்களே அதிகமாக இருக்கின்றன.
தீராத கலைப்பசி ஒருவனுக்கு ஏற்பட்டால் வராத கஷ்டங்கள் வந்தாலும் விடாது முயற்சியை கைக்கொண்டு படாத பாடுகள் பலப்பட்டு மக்கள் மத்தியில் ஒரு நல்ல கலைஞனாய் ஜனனம் எடுப்பானாயின் அவனின் கலை படைப்புகளும் ஒருநாள் வரலாறாகும்.
ஆம் அவ்வாறு கலைத்துறையில் ஜனனம் எடுத்த நடிகர் ஜனாRJ அவர்களே சில்லி சிப்ஸில் (Chillichips) இன்றைய தொடர்பாடல் நட்சத்திரமாக மிளிர இருக்கிறார். அண்ணா உங்களைப் பற்றியஅறிமுகத்தை முதலில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கேள்வி 3 :- சினிமா துறையில் உங்களுடன் மிகவும் நெருக்கமான நண்பர் பற்றி பகிர முடியுமா?
பதில் :- இத்துறையில் உள்ள அத்தனை படைப்பாளிகளும் என் நண்பர்களே. இருந்தும் எனது நண்பர் றொஷான் என் குரு என்றும் சொல்லலாம். என்னை இத்துறையில் காலடி பதிக்கவைத்து அழகுபார்த்தவர். தற்போது வரை என்னை ஊக்குவித்து கொண்டிருப்பவர். மற்றையவர் நண்பர் என்பதை விட அண்ணா என்று சொல்லலாம். மறைந்த கலைஞர் நிரோஷன் அவர்கள். இருக்கும் வரை பலவிதமான ஆலோசனைகள் மூலம் என்னை நெறிப்படுத்தியவர். கலைஞனாக மாற்றியவர் என்றும் சொல்லலாம். வாழ்க்கையில் எத்தனை உயரம் சென்றாலும் மறக்கமுடியாதவர்கள். இவர்களை தவிர்த்து அத்தனை படைப்பாளிகளும் ஒருவிதத்தில் என்னை செதுக்கி கொண்டுதான் இருக்கின்றனர்.
கேள்வி 4 :- Youtube தளத்தில் நகைச்சுவை பொழுதுபோக்கான உங்களின் "எம்டன் புத்தா" தொடரினால் ஏதும் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளீர்களா? அதனை இடைநிறுத்துவதற்கான காரணம் என்ன ?
பதில் :- ஹா..ஹா.. பல விதமான பிரச்சினைகளை எதிர்கொண்டேன். பல மிரட்டல்கள் சமூகத்தை சீர் கெடுப்பவன் என்றெல்லாம் பச்சை குத்தபட்ட காலம் அது. அத்தொடரை இடை நிறுத்த காரணம் தொடர்சியாக பண்ணும் போது படைப்பாளிகள் மற்றும் மக்கள் மத்தியில் வந்த எண்ணம் நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமே. இவரால் சிறப்பாக பண்ண முடியும். மற்றைய பாத்திங்களை நடிக்க முடியாது என்று அவ் எண்ணக்கருவை மாற்றியமைக்க வேண்டும் எனும் எண்ணத்திலேயே தற்காலிகமாக இடைநிறைத்தினேன் காலப்போக்கில் மற்றைய படைப்புகளிலில் பணியாற்றுவதால் நேரமின்மையால் நிறுத்தபட்டுவிட்டது.
கேள்வி 5 :- உங்களுடைய சினிமா பயணத்திற்கு இதுவரை தடையாக இருந்த சிலவற்றை கூறுங்கள்?
பதில் :- வீடு, மனைவி, உறவினர்கள் மத்தியில் சினிமாவிற்கான எதிர்ப்பு. மற்றும் ஒரு சிலரை ஆழமாக நம்பி சில நல்ல படைப்புக்களை தவிர்த்திருக்கின்றேன். இதை தாண்டி பெரிதாக தடைகளில்லை.
கேள்வி 6 :- தற்பொழுது உங்களுடைய எதிர்கால பயணம் எதை நோக்கியதாக உள்ளது?
பதில் :- அன்றும் இன்றும் என்றும் என் முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு வாசகம் இருக்கும் கலைப்பசி தீரா கலைஞன் நான். என் பயணம் எப்போதும் சிறந்த கலைஞனாக மிளிர்வதே.....
கேள்வி 7 :- இதுவரையில் உங்கள் சினிமா பயணத்தில் உங்களுக்கான மிகப்பெரிய அடையாளம் எதுவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில் :- ஒவ்வொரு படைப்புகளும் எனக்கு ஒவ்வொரு விதமான அடையாளத்தையே வழங்கிருக்கின்றது. இது பெரிது அது பெரிதென்று இல்லை. தற்போது அடையாளமாக நினைப்பது மக்கள் மத்தியில் ஓரளவு அறியப்படுகின்ற கொண்டாடபடுகின்ற கலைஞன் என்பதே.
கேள்வி 8 :- உங்களை முதல்முறையாக நீங்களே திரையில் பார்க்கும்போது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது?
பதில் :- எனது முதலாவது குறுந்திரையே (கொள்ளை) ஒரு சிறிய விழாவாக ஒழுங்கமைக்கபட்டு காட்சிப்படுத்தப்பட்டது. பதட்டமான மனநிலையை இருந்தது. காரணம் முதல் திரை பிரவேசம் எவ்வாறான கருத்துகள் வரப்போகின்றன என்று. காலப்போக்கில் என்னையே நான் திரையில் பார்பது ஒருவித போதையை அளித்தது. அதுதான் இன்றுவரை சலிக்காமல் பண்ணவைக்கிற விடமென்றும் சொல்லலாம்.
கேள்வி 9 :- உங்களின் அன்பான ரசிகர்களுக்கும் உங்களை நேசிப்பவர்களுக்கும் நீங்கள் கூற விரும்பும் விடயம் என்ன?
பதில் :- சிம்பிளா சொன்னா நடிகர்.திரு அஜித்குமார் அவர்கள் சொல்றதுதான் "வாழு வாழவிடு". உனக்கான இலட்சியத்தில என்ன தடை வந்தாலும் இழந்தாலும் தொடர்ந்து முன்னேறுங்க. அது மட்டும்தான் நமக்கான முழுமையான சந்தோஷத்த கொடுக்கும்.
கேள்வி 10 :- உங்களுக்கு சினிமாத்துறை தவிர்த்து வேறு ஏதும் துறைகளில் ஆர்வம் உள்ளதா ?
பதில் :- தற்போது Eyebeem lanka என்று ஒரு இளைஞர் அமைப்பொன்றுடன் கைகோர்த்துள்ளேன். அதில் பல வித்தியாசமான நிகழ்வுகளை தயாரிக்கவுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து அதிலும் சாதிக்க எண்ணியுள்ளேன். உங்களுடைய நேரத்தை எங்களுக்காக ஒதிக்கியமைக்கும் எங்களின் கேள்விகளுக்கு மிகவும் அழகாக பதிலளித்தமைக்கும்
Chillichip ஊடாக நன்றிகளைத் தெரிவிப்பதுடன். உங்களுடைய படைப்புக்கள் மென்மேலும் வளர வாழ்த்துகின்றோம். நன்றி.
உங்களுக்கும் நன்றிகள்.. தொடர்ந்து நீங்களும் உங்களுடைய துறையில் வளர என் வாழ்த்துக்கள்.
ஜனாRJ யின் படைப்புக்கள்:
குறுந்திரை:
கொள்ளை
ரணம்
நண்பா
ஏன்டா சாகனும்
சிவா அண்ணா
சந்தர்பம்
செவண்
அஃறிணை
இதுதான் ஞானசித்தர் பாட்டு
கண்ணீர்
ல் த கா சை ஆ
சிவா அண்ணா 2
யௌவனம்
யாம்
முழுநீளத்திரைப்படம்
வேட்டையன்
தீவினை அச்சம்
ஆபத்தாண்டவன்
வதம்
யாழினி
சங்காரம்
மௌனமொழி
பைசா
குறுந்திரை:
தேனிலவு
ஆனா நீங்க
காகிதன்
மீண்டும் ஒரு நிமிடம்
கியூமன்
Covid 21
ஊருக்கு உபதேசம்
ஒற்றைச்சிறகு
The Justice
யோகினி
தாயுமானவர்
ஆய்ந்தறிதல் நன்று
போடியார்
பரோட்டா கடை
வலைத்தொடர்
எம்டன் புத்தா.
ஆதலால் இங்கே வேண்டாம்