Batti தளபதி - நடிகர் ஆதி டிரு

CHAT WITH CC

5/25/2023

மகிழ்ச்சி மிக்க நன்றி. உங்களுடைய நேரத்தினை எங்களுக்காக ஒதுக்கி, எங்களுடைய கேள்விகளுக்கு மனம் திறந்து பதில்கள் கூறியமைக்கும், எங்களுடைய நன்றிகளைத் தெரிவிப்பதுடன் உங்களைப் போன்ற திறமையான நடிகர்களுக்கு சில்லி சிப்ஸ் ஊடாக எங்களுடைய ஆதரவு எப்பொழுதும் இருக்கும் என்றும் கூறிக் கொள்கிறோம்.

டிரு :- மிக்க நன்றி. நான் பார்த்து வந்த விடயம் ஒன்று சிலர் சின்ன கதாபாத்திரம் செய்திருப்பார்கள் அல்லது அப்பொழுது தான் அறிமுகமாகி இருப்பார்கள். அவர்களுக்கு அவார்ட் மற்றும் ஆர்ட்டிக்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும். காரணம் அவர்கள் பெரிய இடத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். என்னையும் சரி என்னை போன்ற சில கலைஞர்களையும் சரி ஊக்குவிக்க மக்களிடம் அறிமுகப்படுத்த இதுவரை யாரும் முன் வந்ததில்லை. முதல்முறையாக என்னை தொடர்பு கொண்டு சில்லி சிப்ஸ் ஊடாக கேள்விகளை பரிமாறியமைக்கும், என்னை வாழ்த்தியமைக்கும் என் நன்றிகளை மனமகிழ்ந்து சில்லி சிப்ஸ்ற்கும் உங்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Aathiththan Dirusan Popularly known as "AATHI DIRU" , An Actor in Tamil film industry Srilanka, acted in a film, Tv serials, album songs and more than 15 shortfilms. Debut shortfilm named as "Abdulkalam Enna Sonnaru" (2013)

PORTFOLIO :

"உண்மையான கலைஞன் என்பவன் தன்னை மட்டும் நிலைநாட்ட நினைக்காமல் மக்களின் மகிழ்ச்சிக்காக எத்தனையோ வலிகளையும், அவமானங்களையும் தாண்டி நல்ல படைப்புகளை கொடுப்பவன் ஆவான்". அப்படி உண்மையான கலைஞர்களை எம்மவர் மத்தியில் மட்டுமல்லாது உலகெங்கும் அறிமுகப்படுத்தவே சில்லி சிப்ஸ் (#chillichips) ஊடாக நாங்கள் தயாராகியுள்ளோம்.

அந்த வரிசையில் மட்டக்களப்பில் வளர்ந்து வரும் நடிகர்களில் "Batti தளபதி" என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஆதி டிரு அவர்களை தொடர்பு கொண்டோம். வணக்கம், சில்லி சிப்ஸ் ஊடாக உங்களுடன் கலந்துரையாட போவதில் மிகவும் மகிழ்ச்சி. உங்களைப் பற்றிய அறிமுகத்தை கூறுங்கள்.

டிரு :- எனது பெயர் ஆதித்தன் டிருஷன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மட்டக்களப்பில் தான். என் ஆரம்பக் கல்வியை கோட்டைமுனை வித்தியாலயத்திலும் மேற்படிப்பை புனித மைக்கேல் கல்லூரியிலும் பயின்றேன். பெரிதாக சொல்ல எதுவும் இல்லை நான் ஒரு சாதாரண நடிகன்.

கேள்வி 1 :- நீங்கள் நடிகனாக சினிமாவின் உள்ளே வரக்காரணம் என்ன ?

பதில் :- பாடசாலை பருவங்களில் நாடக அரங்கியல் பாடம் விரும்பி கற்றேன். சில நாடகங்களிலும் நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளேன். அதிலிருந்தே நடிப்பில் ஓர் ஆர்வம் ஏற்பட்டது. அதன்பின் என் நண்பர் ஒருவர் குறுந்திரைப்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். என்னையே அதில் நடிக்கக் கூறினார். அதுவே எனது முதலாவது

குறுந்திரைப்படம் "சல்லி". ஆரம்பமே பல கிண்டல்களுக்கு உள்ளானது. அதனாலேயே எங்களுக்குள் ஒரு வைராக்கியம் மற்றவர் பாராட்டும் அளவிற்கு மேன்மையான படைப்பை செய்ய வேண்டும் என்று, 2013இல் "அப்துல் கலாம் என்ன சொன்னாரு" என்ற குறும்படம் செய்தோம். அதன் மூலம் கிடைத்த பாராட்டும் வாழ்த்தும் இன்னும் என் ஆர்வத்தை தூண்டியது.

சினிமாவில் உள்வர முதல் காரணம் இதுவாக இருந்தாலும் இந்திய சினிமாவை பார்த்தவரை பலர் கோடிக்கணக்கில் சம்பாதிப்பார்கள் ஆனால் பிறருக்கு உதவுவது குறைவாக இருக்கும். சிலர் அன்று முதல் இன்று வரை உதவி கொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோல் எனக்கு இல்லாத ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று நிறைய ஆசைகள் உண்டு. ஆனால் அந்தளவு வசதி இல்லை. சினிமா துறையில் சிறிய தொகை சம்பாதித்தாலும் அதை ஏழைகளுக்கு உதவவேண்டும் என்பது என்னுடைய ஆசை. அத்துடன் என்னுடைய கலை படைப்பில் மக்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பது பெரிய ஆசை. இதனால்தான் நான் சினிமா துறையை விரும்பினேன்.

கேள்வி 2 :- சினிமாவின் உள்ளே வரமுன் இருந்த டிருவிக்கும் சினிமாவின் உள்ளே வந்தபின் இருக்கின்ற டிருவிக்கும் என்னென்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?

பதில் :- சினிமாவிற்குள் வரமுன் என்னை கொஞ்ச பேருக்குதான் தெரியும். இப்போ நிறைய பேருக்கு தெரியுது என்னை விரும்புவர்கள் சினிமாவின் உள்வந்த பின்புதான் அதிகமாக கிடைத்தது. சோசியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட வேண்டும் என்றாலும் பல தடவை சரிபிழை பார்த்து

பதிவிடும் அளவிற்கு சினிமா என்னை மெருகூட்டி உள்ளது.

கேள்வி 3 :- சினிமாவின் உள்வந்த ஆரம்பம் முதல் இன்று வரை நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அல்லது சவால்கள் என்ன?

பதில் :- ஆரம்பத்தில் என் சொந்தக்காரர்கள் சிலர்தான் பிரச்சனையாக இருந்தார்கள். சினிமா எல்லாம் தேவையில்லாத வேலை அப்படி எதிர்ப்புகள் நிறைய இருந்தது. அதிலும் சிலர் பெண்களுடன் நெருக்கமான நடிப்பதை விரும்புவதில்லை. சிலர் என்னுடைய பெற்றோர்களிடம் வந்தே "என்ன உங்க மகன் Girls கூட எல்லாம் நடிச்சிட்டு இருக்கான்" அப்படியும் சொல்லி இருக்கிறார்கள். நம்ம கதாபாத்திரமாகமாறி நடிக்க முயற்சிப்பம், அதை வேற மாதிரி புரிஞ்சி சிலர் கேலி பேச்சுக்களை பேசுவாங்க. நல்லா நடிக்கலன்னாலும் நல்லா இல்லன்னு சொல்லுவாங்க. நல்லா நடிச்சிருந்தாலும் நல்லா இல்லன்னுதான் சொல்லுவாங்க. இது ஆரம்ப கட்டத்தில் எதிர்கொண்ட பிரச்சனைகள்.

ஆனால் இப்போ வரைக்கும் எதிர்கொள்வது, கலைஞர்களுக்குரிய ஒரு சவால் என்னவென்றால் நாம கஷ்டப்பட்டு ஒரு படம் பண்ணுவோம். 15-20 நாள் சூட் போய் நடித்திருப்போம். டப்பிங் பண்ணி கொடுத்திருப்போம். ஆனால், படம் வெளிவராது. இல்லை என்றால் பாதியில் படப்பிடிப்பு நிற்கும். ஒரு கலைஞனின் பெரிய சந்தோஷமே நாம பண்ணின படம் வெளிவரும் போது மக்கள் தரும் பாராட்டுக்கள் தான் பெரிதாக இருக்கும். அதைத்தான் எதிர்பார்த்து நாமும் செய்வோம். ஆனால் சில பிரச்சனைகளால் படம் வெளியிட மாட்டார்கள். அடுத்தது நம்மள தட்டி தூக்கி விடுறாங்களோ இல்லையோ தட்டி விட நிறைய பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் ஒரு கலைஞனா எனக்கு ஏற்பட்ட பிரச்சனைகள்.

கேள்வி 4 :- நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்கே மிகவும் பிடித்த உங்களை நீங்களே ரசித்த படங்கள் எவை ?

பதில் :- என்னுடைய "வேட்டையன்" படம் பெரிய வரவேற்பை பெற்றது. 12 காட்சிகளில் 10 காட்சிகள் என்று House full. யாருமே எதிர்பாராதளவு வெற்றி கிடைத்தது. நான் எத்தனை படம் செய்தும் வெளியில் பார்ப்பவர்கள் என்னை "வேட்டையன் ஹீரோ" என்று தான் அழைப்பார்கள். அப்படி எனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படம் என்பதால் மிகவும் பிடிக்கும். இப்படத்தில் இறுதிக்காட்சி எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. போலீஸ் கதாபாத்திரம் என்பதால் விஜய்,சூர்யா

போன்ற நடிகர்களை பார்த்து பயிற்சி செய்தே அக்காட்சியினை நடித்து முடித்தேன். அடுத்ததாக எனக்கு "கழுதை" படம் மிகவும் பிடிக்கும். YouTube மற்றும் Facebook இல் எதிர்பார்க்காதளவு வரவேற்பை பெற்றது. அத்துடன் இது ஒரு சமூக விழிப்புணர்வு படமாகும். அடுத்து "விண்மீன் வேட்டையன்" அனேகமானவர்களுக்கு இப்படம் பற்றி தெரியாது. ஆனால், இதன் உருவாக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். பாடல் என்ற வகையில் "மௌவை" படத்தில் வரும் காதல் தோல்வி பாடல் ஒன்றும், படத்தின் இறுதியில் வரும் அம்மா பாடலொன்றும் மிகவும் பிடிக்கும்.

கேள்வி 5 :- சினிமா துறையில் தற்பொழுது நீங்கள் நடிகராக மட்டும் வலம் வருகின்றீர்கள். அதேபோல், அத்துறையில் வேறு முயற்சிகள் செய்ய ஆர்வம் உள்ளதா?

பதில் :- நிச்சயமாக ! எனக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்று ஆர்வம் உண்டு. காரணம் நான் சக்தி டிவியில் 2015 ஆம் ஆண்டு உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். அன்று முதலாக இந்த ஆர்வம் ஏற்பட்டது. நேரயின்மையால் இதுவரை முயற்சி செய்யவில்லை. ஆனால், எப்படியாவது ஒரு படமாவது இயக்குனராக செய்து முடிப்பேன் என்று நம்பிக்கை உள்ளது.

சேர்த்து பேசுவதற்காக மிகவும் கஷ்டப்பட்டு உள்ளேன். ஆனாலும் என்னால் முடிந்தளவு சிறப்பாக செய்து முடித்துள்ளேன்.

கேள்வி 7 :- இலங்கையின் முன்னணி தொலைக்காட்சிகளில் சக்தி டிவியும் ஒன்று. அதில் நீங்கள் சீரிஸ் செய்துள்ளீர்கள். அதன் அனுபவம் எவ்வாறு இருந்தது?

பதில் :- நான் சக்தி டிவியில் இரண்டு சீரிஸ் நடித்துள்ளேன். 2016 இல் "மறுபடியும்" மற்றும் 2022 இல் "#ஹேஷ்டெக்" என்பனவாகும். சக்திடிவி குழுவினர் பொதுவாக கொழும்பு,யாழ்ப்பாணம் பகுதிகளில் இருந்து நடிகர்களை தெரிவு செய்வது வழக்கம். ஆனால் நான் பெருமையாக சொல்லிக்கொள்வது கிழக்கிலிருந்து முதல்முறையாக கதாநாயகனாக நடித்துள்ளேன். ஆனால் இது கஷ்டப்படாமல் கிடைக்கவில்லை. இதற்கு முன் ஹீரோ பிரண்ட் (hero friend) மற்றும் ஹீரோ (hero) என்று பல ஆடிஷனுக்கு (audition)சென்றுள்ளே. அதன் பின்பே இவ்வாய்ப்பு கிடைத்தது. நான் சக்தி டிவியில் ஹீரோவாக நடித்ததை என் சாதனையாக நினைக்கிறேன். என்னைப்போல் கிழக்கிலிருந்து இன்னும் பல நடிகர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது எனது ஆசை.

கேள்வி 8 :- தற்போது நம்மவர் சினிமாவில் (இலங்கை) நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதுபோல் தென்னிந்தியாவிலிருந்து வாய்ப்பு கிடைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

பதில் :- ஆம். நிச்சயமாக, இந்திய சினிமாவில் இருந்து வாய்ப்புக்கள் கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன். 2016ஆம் ஆண்டிலும் கூட எனக்கு சிறியதொரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பெற்றோர் சம்பந்தம் கிடைக்கவில்லை என்பதால் போகவில்லை. இப்பொழுது கிடைத்தால் நிச்சயமாக போவேன். காரணம் என்னை போன்ற கலைஞர்களையும் இந்திய சினிமாவிற்கு இங்கிருந்து அறிமுகம் செய்யவும் வாய்ப்பு கிடைக்கும் என்பதாகும்.

கேள்வி 6:- ஒரு நடிகனானவன் மகிழ்ச்சி, கவலை, சண்டைக் காட்சி, நடனம், நகைச்சுவை என்று பல முகங்களை காட்ட வேண்டும். அந்த வகையில் உங்களுக்கு மிகவும் கடினமான விடயம் எது?

பதில் :- கஷ்டப்பட்டு செய்த விடயம் என்றால் சண்டைக் காட்சிகள்தான். குறுந்திரைப்படங்களில் சண்டைக் காட்சிகள் குறைவாக இருக்கும்.

ஆனால் முழுநீள படங்களில் அதிகமாக இருக்கும். உதாரணமாக "வேட்டையன்" படத்தில் உண்மையாகவே அடிகள் பட்டதுண்டு. நான் சண்டைக் காட்சிகளுக்காக நடனத்திற்காக என்று பயிற்சிகள் எதுவும் போனதில்லை. என்னால் முடிந்தளவு என் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளேன். இதை தவிர்த்து சில காட்சிகளில் தொடர்வசனங்களை நடிப்புடன்

கேள்வி 9 :- ஒரு நடிகனுக்கு தன்னுடைய படைப்பை மக்களோடு இருந்து திரையரங்கில் பார்க்கும் மகிழ்ச்சி மிகையில்லாதது. அந்த வகையில் உங்களுக்கு அதன் அனுபவம் எவ்வாறு இருந்தது ?

பதில் :- என்னுடைய "அப்துல்கலாம் என்ன சொன்னாரு" என்ற படம் Hall ஒன்றில் வெளியிட்டார்கள் hall முழுவதும் மக்கள் நிரம்பி இருந்தார்கள். அதுவே பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. முதலில் திரையிடப்பட்ட படம் "சர்ப்பங்கள்

தீண்ட பிழைத்து வாழ்" என்பதாகும். தென்னிந்திய நடிகர்களின் படத்தை திரையரங்கில் பார்த்த எனக்கு என்னுடைய படத்தையே பார்க்கும் பொழுது மிகவும் பெருமகிழ்ச்சி. அதற்குக் கூற வார்த்தை எதுவும் இல்லை. "வேட்டையன்" படம் பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியும் தந்தது. பின் கிழக்கு மாகாணத்தில் ஆறு திரையரங்குகளில் எனது படம் வெளியிடப்பட்டது. மக்கள் சத்தமிட்டு விசில் அடிக்கும் பொழுதும் கட்டவுட் வைத்து கொண்டாடும் பொழுதும் அதை விட பெரிய மகிழ்ச்சி ஒரு நடிகனுக்கு என்ன வேண்டும். இவையெல்லாம் என் வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள்.

கேள்வி 10 :- சினிமா தளத்தில் "ஆதி டிரு" என்றால் நிறைய பேர் விரும்புவார்கள். சில பேர் விரும்ப மாட்டார்கள். அப்படி உங்களை விரும்புவர்களுக்கும் வெறுப்பவர்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

பதில் :- ஆம். என்னை வெறுப்பவர்கள் சினிமா சம்பந்தமாக நிறைய பேர் இருக்காங்க. ஆனால் நேரடியாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். அதை சில தருணங்களில் நான் உணர்ந்து கொண்டேன். அதேபோல் என்னை தட்டிக் கொடுத்து தூக்கி விட வேண்டும் என்று பலர் இருக்காங்க. அதில் முக்கியமாக நான் கூறிக் கொள்வது விஷ்ணுஜன் அவர்களை. "வேட்டையன்" படத்தை என் வாழ்வில் முக்கியமான ஒன்றாக உணர்கிறேன். அதற்குக் காரணம் விஷ்ணுஜந்தான். அவருக்கு எப்பொழுதும் நான் நன்றி கடன் பட்டுள்ளேன். அடுத்து கோடீஸ்வரன் அண்ணா அவரும், அவர் படங்களில் நிறைய வாய்ப்புகளை எனக்கு தந்துள்ளார். என்னை விரும்புவர்களுக்கு நான் கூறிக் கொள்வது, என்னை போல் எல்லா கலைஞர்களையும் விரும்புங்கள், ஊக்குவியுங்கள். என்னை வெறுப்பவர்களுக்கு கூறிக்கொள்வது வெறுத்துக்கொண்டே இருங்கள். ஏனெனில், வெறுப்பதால் தான் மேலும் முதன்மையான படைப்புகளை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுகிறது.